“உன்னுடைய தகுதியை நீயே தெரிந்துகொள்ள, உனக்கு ஒரு தோல்வியும் ஒரு வெற்றியும் தேவைப்படுகிறது.”அனுபவம் தகுதி
“உன் தோல்வியில் உனக்குக் கிடைத்த அவமானத்தை, அவமானமாக எடுத்துக்கொள்ளாமல் அனுபவமாக எடுத்துக்கொள்.”அவமானம் அனுபவம்
“தோல்வி முயன்றவனுக்கும் கிடைக்கும்; முயலாதவனுக்கும் கிடைக்கும். நீ முயன்றவன் என்றால், அத்துடன் உனக்கு அனுபவமும் கிடைக்கும்.”அனுபவம் தோல்வி
“உன் முயற்சிகள் அனைத்தும் பயனற்றவை என்று நினைக்காதே; அதில் நீ பெற்ற அனுபவங்களே உனக்கு பயனளிக்கும்.”அனுபவம் முயற்சி
“தோல்வியை நினைத்து எனக்கு கவலை இல்லை; வெற்றி தராத ஒன்றை தோல்வி எனக்குத் தந்துள்ளது. அதுவே அனுபவம்.”அனுபவம் தோல்வி
“இன்று உனக்கு ஏற்படும் எதிர்ப்புகளை நினைத்து பயம் கொள்ளாதே; அதில் கிடைக்கும் அனுபவங்களை நினைத்து பெருமிதம் கொள்.”அனுபவம் எதிர்ப்பு
“உனக்கு கிடைத்த தோல்விகளிலிருந்து நீ கற்றுக்கொள்ள வேண்டியது அவமானங்களை அல்ல, அனுபவங்களை.”அவமானம் அனுபவம்