“உன் திறமையின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்; அது நீயாக மட்டும் இருந்துவிடாதே.”தன்னம்பிக்கை திறமை
“சில தோல்விகளும் நல்லதுதான்; அந்தத் தோல்விகளை எதிர்கொள்ளும் போதுதான் உன் திறமை வெளிப்படுகிறது.”திறமை தோல்வி
“உன் திறமை ஒருபோதும் மற்றவரின் கையால் வெளிப்படுவதில்லை; உன் தன்னம்பிக்கையால் மட்டுமே வெளிப்படும்.”தன்னம்பிக்கை திறமை
“வேறு ஒருவருடைய திறமைக்கான பரிசை பெற்றுக் கொள்பவன், ஒருபோதும் தன்னுடைய திறமையை அறிந்து கொள்ளப் போவதில்லை.”திறமை பரிசு
“வாய்ப்பு என்பது நாம் தேடி செல்வதல்ல; நம் திறமையால் நம்மைத் தேடி வருவது. திறமையை வளர்த்துக் கொள்; நாளை வாய்ப்பு நம்மைத் தேடி வரும்.”திறமை வாய்ப்பு