“வாய்ப்பு என்பது ஒவ்வொரு முறையும் கிடைப்பதில்லை; ஏதோ ஒரு முறை கிடைப்பது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதே சாலச் சிறந்தது.”முயற்சி வாய்ப்பு
“விட்டுப்போகும் வாய்ப்பை நினைத்து கவலை கொள்ளாமல், அடுத்த வாய்ப்பை நீயே உருவாக்கிக்கொள்”முயற்சி வாய்ப்பு
“வாய்ப்பு சிலருக்குக் கற்றுக்கொடுக்கும்; சிலரைக் கைவிட்டும் போகும். உனக்குக் கிடைத்த வாய்ப்பைக் கற்றுக்கொள்; கைவிட்டுவிடாதே.”கற்றல் வாய்ப்பு
“உனக்கான வாய்ப்பு உன்னைத் தேடி வரும்போது அதை ஏற்றுக்கொள்; நீ எதிர்பார்க்கும் தருணத்தில் அந்த வாய்ப்பு உனக்குக் கிடைக்காது.”தருணம் வாய்ப்பு
“உனக்கு ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்; ஏனென்றால் அந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் என்பது சந்தேகம்தான்.”முயற்சி வாய்ப்பு
“உன்னுடைய வாய்ப்பை எவராலும் தட்டிப்பறிக்க முடியாது; நீ அந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டாய் என்பதே அதன் பொருள்.”முயற்சி வாய்ப்பு
“வாய்ப்பு என்பது எல்லோருக்கும் வந்துவிடாது; அதற்கான திறமை உன்னிடம் இருந்தால் மட்டுமே அந்த வாய்ப்பு உன்னைத் தேடி வரும்.”திறமை வாய்ப்பு
“நீ இழந்த ஒன்றை உனக்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்; மீண்டும் உனக்கான வாய்ப்பை நீ எப்போதும் இழக்க மாட்டாய்.”வாய்ப்பு வெற்றி
“இதுவரைக்கும் உனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நீ சரியாகப் பயன்படுத்திக் கொண்டாய்; அதுவே உன் இலக்கை அடைவதற்கான காரணம்.”இலக்கு வாய்ப்பு
“என் முன்னே எவ்வளவு பெரிய தடை இருந்தாலும் எனக்கென்ன? அதைத் தாண்டிச் செல்ல எனக்குத் தேவையானது ஒரு சிறு வழி மட்டுமே.”தடை வாய்ப்பு
“வாய்ப்பு என்பது நாம் தேடி செல்வதல்ல; நம் திறமையால் நம்மைத் தேடி வருவது. திறமையை வளர்த்துக் கொள்; நாளை வாய்ப்பு நம்மைத் தேடி வரும்.”திறமை வாய்ப்பு