“நீ இழந்த ஒன்றை உனக்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்; மீண்டும் உனக்கான வாய்ப்பை நீ எப்போதும் இழக்க மாட்டாய்.”வாய்ப்பு வெற்றி
“வெற்றியை பட்டமாக மாற்றி, அதை காற்றில் பறக்க விடு; தோல்வியை விதையாக மாற்றி, உன் நெஞ்சில் புதைத்து விடு.”தோல்வி வெற்றி
“நாளை உனக்கான வழியை அடைய வேண்டுமென்றால், இன்று உனக்கான வலியை நீ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.”வலி வெற்றி
“ரோஜா எனும் வெற்றியை நீங்கள் அடைய வேண்டும் என்றால், முட்கள் எனும் வலியை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.”வலி வெற்றி
“உனக்கான வெற்றி என்பது கடைசி ஒரு நொடியில் கூட உனக்காகக் காத்திருக்கலாம்; இறுதிவரை போராடு, வெற்றி நிச்சயம்.”போராட்டம் வெற்றி
“ஒவ்வொரு இரவிற்கும் விடியல் என்பது நிச்சயம் உண்டு; அதுபோல, ஒவ்வொரு விடாமுயற்சிக்கும் வெற்றி என்பதும் நிச்சயம் உண்டு.”விடாமுயற்சி வெற்றி
“நீ இன்று தோற்றதால் அவமானம் உனக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால், அடுத்த ஒவ்வொரு நொடியும் அந்த அவமானமே உன் வெற்றிக்கு வழிவகுக்கும்.”அவமானம் வெற்றி
“உன் முயற்சிக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்; உன் முயற்சியின்மைக்கு ஒரே காரணம், நீ முயற்சிக்காமல் இருப்பதே.”முயற்சி வெற்றி
“உன்னுடைய முயற்சியில் நீ வெற்றிபெற வேண்டும் என்றால், உன்னை நீயே ஒருமுறை சோதித்துக்கொள்.”முயற்சி வெற்றி
“‘இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை’ என்ற துணிச்சல் உன்னிடம் இருந்தால், இனி எதையும் இழக்க மாட்டாய்.”துணிச்சல் வெற்றி
“தன்னம்பிக்கை என்னும் விதையை விதைத்து, தடைகள் என்னும் பாறையை உடைத்துச் செல்பவனுக்கே வெற்றி நிச்சயம்.”தன்னம்பிக்கை வெற்றி
“தன் கையை மட்டும் நம்பி தோற்றவர்கள் இவ்வுலகில் உண்டு; தன்னம்பிக்கையை நம்பி தோற்றவர்கள் இவ்வுலகில் எவருமில்லை.”தன்னம்பிக்கை வெற்றி
“இவ்வுலகில் சாதித்தவர்கள் அனைவரும் விடாமுயற்சியால் உயர்ந்தவர்களே; அதிர்ஷ்டத்தால் அல்ல.”விடாமுயற்சி வெற்றி
“தோல்வி என்பது இருள் வெற்றி என்பது வெளிச்சம் தோல்வியின் இருளிலிருந்து வெற்றி எனும் வெளிச்சத்திற்கு நீ வரும்வரை போராடு.”தோல்வி வெற்றி
“வெற்றியும் நிரந்தரமல்ல; தோல்வியும் நிரந்தரமல்ல. ஆனால், முயற்சி உன்னிடம் இருந்தால் வெற்றி மீண்டும் மீண்டும் உன்னைத் தேடி வரும்.”முயற்சி வெற்றி
“உன்னை அவமானப்படுத்தியவர்களை அவமானப்படுத்துவது பதிலடி அல்ல; அவர்கள் முன்னே வாழ்ந்து காட்டுவதே உண்மையான பதிலடி.”அவமானம் வெற்றி
“இன்று அடைந்த தோல்வியைக் கடந்து சென்றால்தான், நாளை கிடைக்கும் வெற்றியை என்னால் அடைய முடியும்.”தோல்வி வெற்றி
“காயங்களும் தழும்புகளும் உன் தோல்வியின் அடையாளங்கள் அல்ல; அவையே உன் வெற்றியின் தொடக்கத்தின் அடையாளங்கள்.”காயம் வெற்றி
“உன் இரண்டு கைகளையும் இழந்தாலும், தன்னம்பிக்கையை இழக்காமல் இருந்தால் உலகையே வெல்லலாம்.”தன்னம்பிக்கை வெற்றி
“என்னை வெல்ல இவ்வுலகத்தில் என்னைத் தவிர வேறு எவரும் இல்லை என்று நினைத்துக் கொண்டாலே, உன்னை வெல்ல இவ்வுலகில் எவரும் இல்லை.”தன்னம்பிக்கை வெற்றி
“உன் வெற்றியை காண ஒரு சிலர் மட்டுமே இருக்கிறார்கள்; ஆனால் உன்னுடைய தோல்வியை காண இவ்வுலகமே காத்திருக்கிறது. உன் தோல்வியை ஒருபோதும் இவ்வுலகிற்கு காட்டாதே.”தோல்வி வெற்றி
“என்னைச் சோதிப்பது வெற்றிதான் என்று நினைத்து, வெற்றி தரும் சோதனைகளை கடந்து செல்பவனுக்கே வெற்றி நிச்சயம்.”சோதனை வெற்றி
“வெற்றி என்பது சிலருக்கு கடலில் நீந்துவது போல கடினமாகவும், சிலருக்கு ஆற்றில் நீந்துவது போல எளிமையாகவும் இருக்கும்; எதிலும் நீந்த பழகிக் கொண்டால் வெற்றி நிச்சயம்.”நீந்தல் வெற்றி
“இன்று நீ தோல்வி அடைந்தாய் எனில், நாளை நீ வெற்றி பெறுவதற்கான முதல் படியை கடந்து விட்டாய் என்று அர்த்தம்.”தோல்வி வெற்றி
“நீ எதை மறந்தாலும், உன் அவமானங்களை மட்டும் மறந்து விடாதே; உன் அவமானமே அடுத்த உன் வெற்றிக்கு வழிவகுக்கும்.”அவமானம் வெற்றி
““காயங்கள் இல்லாமல் போர்க்களத்தில் வெற்றி என்பது எவருக்கும் இல்லை; வலிகளை தாங்கி நிற்பவனுக்கே வெற்றி சொந்தமாகிறது.””வலி வெற்றி