“நீ ஆபத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறாய் எனில், அதை ஆபத்து என்று உணராத வரை உனக்கு ஆபத்து இல்லை. தைரியத்துடன் போராடு!”துணிச்சல் போராட்டம்
“கையை ஊன்றி நீ எழும்போது, விழுந்துவிடுவோமோ என்று நினைத்திருந்தால், இன்றும் நீ குழந்தையாகவே இருந்திருப்பாய்”துணிச்சல் வளர்ச்சி
“உன்னை எதிர்ப்பவன் பலம் பொருந்தியவனாக இருந்தால், நீ எதிர்த்து நில். நீ எதிர்த்து நின்றாலே, அவனின் தன்னம்பிக்கையும் சிறிது குறையும்.”தன்னம்பிக்கை துணிச்சல்
“உன்னை எதிர்த்து நிற்பவரைப் பார்த்து பயப்படாதே; உன்னை வெல்ல உன்னைத் தவிர வேறு எவரும் இல்லை என்ற எண்ணத்தை உருவாக்கு.”தன்னம்பிக்கை துணிச்சல்
“‘இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை’ என்ற துணிச்சல் உன்னிடம் இருந்தால், இனி எதையும் இழக்க மாட்டாய்.”துணிச்சல் வெற்றி