“துன்பம் என்னை விட்டு விலகுவதில்லை என்று நினைக்காதே; நீ அதைவிட்டு விலகி நிற்கவில்லை என்பதே உண்மை!”துன்பம் மனவலிமை
“துன்பம் இன்று வரும்; நாளையும் வரலாம். ஆனால், துன்பம் மட்டுமே உன்னைத் தொடர்ந்து கொண்டிருக்கப் போவதில்லை!”இன்பம் துன்பம்
“இன்று நீ துன்பத்தில் இருக்கிறாய் என்றால், நாளை இன்பத்தில் மிதக்கப்போகிறாய் என்பதே அதன் பொருள்!”இன்பம் துன்பம்
“துன்பமில்லாத வாழ்க்கை என்று எதுவும் இல்லை; அதைத் தாண்டிச் செல்லப் பழகிக்கொள். இன்பமான வாழ்க்கை உனக்காகக் காத்திருக்கிறது!”துன்பம் நம்பிக்கை
“உனக்கு ஏற்பட்ட துன்பங்களைக் கடந்து செல்வதற்கு, உன்னிடம் மனதைரியம் மட்டும் இருந்தால் போதும்.”துன்பம் மனதைரியம்
“உன் வாழ்க்கையில் துன்பங்களுக்கு மேல் துன்பம் வந்துகொண்டே இருக்கிறது என்றால், இன்பம் உன்னைத் தேடி வரும் காலம் நெருங்கிவிட்டது என்று அர்த்தம்.”இன்பம் துன்பம்
“இருளை சந்திக்கும் ஒவ்வொரு இரவும் அதன் விடியலை சந்திக்கிறது; அதைப் போலத்தான் துன்பம் என்ற இருளை சந்திக்கும் ஒவ்வொருவரும் அதன் விடியலான மகிழ்ச்சியையும் விரைவில் சந்திப்பார்கள்.”துன்பம் விடியல்
“தனக்கு ஏற்படும் துன்பங்களைக்கூட ஒரு பாடமாக கற்றுக்கொண்டால், இவ்வுலகில் அனைத்தையும் வெல்லலாம்.”துன்பம் பாடம்
“வாழ்க்கையில் நீ பெறும் துன்பங்கள் அனைத்தையும் சிறு மடுவாக நினைத்து கடந்து சென்றால், அந்த இமயமும் உன் காலுக்குக் கீழே.”துன்பம் வாழ்க்கை