“நீ நிகழ்காலத்தில் வாழ்வது, எதிர்கால வாழ்க்கையை இன்றே வாழ்வதற்காக அல்ல; அதைச் சிறப்பாக அமைப்பதற்காக!”எதிர்காலம் நிகழ்காலம்
“இன்று நீ நட்டு வைத்த செடிதான் நாளை மரமாகும்; அதுபோல, இன்று நீ செய்யும் செயல்கள்தான் நாளைய உன் விடியலுக்கு வழிவகுக்கும்!”எதிர்காலம் முயற்சி
“நிகழ்காலத்தில் உன் இலக்கைத் தெளிவாகத் தீர்மானித்தால்தான், எதிர்காலத்தில் அதை அடைய முடியும்!”இலக்கு எதிர்காலம்
“கடந்த காலத்தில் நீ செய்த தவறை நிகழ்காலத்தில் மாற்ற முடியாது; ஆனால் நிகழ்காலத்தில் செய்யவிருக்கும் தவறைத் திருத்திக்கொண்டால், உன் எதிர்காலத்தை மாற்றலாம்.”எதிர்காலம் கடந்தகாலம்
“உன் எதிர்காலத்தை உனக்கு ஏற்றபடி மாற்றி அமைக்க வேண்டும் என்றால், அதை இப்போதே இந்த நிகழ்காலத்திலேயே செய்து முடி!”எதிர்காலம் நிகழ்காலம்
“இன்றைய நாள் உனக்கானது என்றால், நீ செய்வதை இன்றே செய்; நன்றே செய்; நாளை உனதாய் மாறும்.”எதிர்காலம் நிகழ்காலம்
“கடந்த காலத்தை எண்ணி வருந்தாதே; உன் எதிர்காலத்தையாவது உனக்கு ஏற்றபடி மாற்றிக்கொள் இந்நிகழ்காலத்தில்.”எதிர்காலம் நிகழ்காலம்
“உன் கையில் இருக்கும் நிகழ்காலத்தை வீணாக்காதே; இதனால் வரவிருக்கும் உன் எதிர்காலம் வீணாகும் என்பதை நினைவில் கொள்.”எதிர்காலம் நிகழ்காலம்
“நீ இழந்த கடந்த காலத்தையும், வரவிருக்கும் எதிர்காலத்தையும் உன் நிகழ்காலத்தால் மாற்றியமைக்க முடியும்.”எதிர்காலம் நிகழ்காலம்