““எல்லோருக்கும் தோல்வி என்பது நிச்சயம் உண்டு; அந்தத் தோல்வியை சமாளிக்கும் திறமை உள்ளவனே, அடுத்த வெற்றியை அடைகிறான்.””தோல்வி வெற்றி
“உன் அச்சத்தை உச்சத்தில் கொண்டு வைக்காதே; அதை துச்சமாக தூக்கி எறிந்தால், வெற்றி நிச்சயம்.”அச்சம் வெற்றி
“உன்னுடைய வெற்றியில் உன்னோடு ஆயிரம் பேர் இருக்கலாம்; உன்னுடைய தோல்வியில் உன்னோடு நீ மட்டுமே இருப்பாய்.”தோல்வி வெற்றி
“போராடி வெற்றியைப் பெற்றவரிடம் கேட்டுப் பார்; தோல்விக்குப் பின் தான் வெற்றி, வெற்றிக்குப் பின் தோல்வி என்பதே இல்லை.”தோல்வி வெற்றி
“போராட்டத்திற்கு முன்பே தோற்றுவிடுவோமோ என்று நினைக்காதே; போராடி தோற்றாலும், வெற்றி பெற்றவனும் உன்னை எளிதில் மறக்க மாட்டான்.”போராட்டம் வெற்றி
“வெற்றி தரும் தலைக்கனத்தை விட, தோல்வி தரும் தலைகுனிவே உன்னை தலைசிறந்தவனாக உருவாக்கும்.”தலைகனம் வெற்றி
“படிகளை தடைகளாகப் பார்த்தால் தோல்வி நிச்சயம்; அதுவே தடைகளைப் படிகளாக மாற்றி முன்னேறினால் வெற்றி நிச்சயம்.”தடை வெற்றி