“உன் கனவு எட்டாத தூரத்தில் இருந்தாலும், நீ அதை எட்டிப் பிடிக்கலாம்; விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் உன்னிடம் இருந்தால்.”தன்னம்பிக்கை விடாமுயற்சி
“ஒவ்வொரு இரவிற்கும் விடியல் என்பது நிச்சயம் உண்டு; அதுபோல, ஒவ்வொரு விடாமுயற்சிக்கும் வெற்றி என்பதும் நிச்சயம் உண்டு.”விடாமுயற்சி வெற்றி
“உனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்க, என்றும் உன் விடாமுயற்சியை உன்னுடனே வைத்துக்கொள்.”அடையாளம் விடாமுயற்சி
“உன் விடாமுயற்சியால் தோல்வியே உன்னிடம் தோற்றுப்போகும் வரை, முயற்சி செய்து கொண்டே இரு.”தோல்வி விடாமுயற்சி
“இவ்வுலகில் சாதித்தவர்கள் அனைவரும் விடாமுயற்சியால் உயர்ந்தவர்களே; அதிர்ஷ்டத்தால் அல்ல.”விடாமுயற்சி வெற்றி
“விருப்பம் இல்லாமல் செய்தால் சிறு கல்லைக்கூட நகர்த்த முடியாது; விருப்பத்தோடு செய்தால் பெரிய மலையைக்கூட தகர்த்தெறிய முடியும்.”விடாமுயற்சி விருப்பம்
“உன் விடாமுயற்சியையும் சகிப்புத்தன்மையையும் கண்டு, தோல்விதான் பயப்பட வேண்டுமே தவிர, நீ அல்ல.”சகிப்புத்தன்மை விடாமுயற்சி
“உன்னுடைய வலி உன்னுடைய வலிமையை தீர்மானிப்பதில்லை; உன்னுடைய விடாமுயற்சியே உன்னுடைய வலிமையை தீர்மானிக்கிறது.”வலிமை விடாமுயற்சி