“இவ்வுலகில் யாவரையும் சாதாரணமாக எண்ணாதே; தெருவில் இருக்கும் காகிதமும் ஒருநாள் பட்டமாக உயரத்தில் பறந்தால்தான் அதன் உயரம் தெரியும்.”உயர்வு வாழ்க்கை
“நாம் யாருக்கும் எதிரியாக இருக்கக் கூடாது என்று நினைப்போம்; ஆனால் நீ களத்தில் ஒருவரை சந்தித்தால், அவர் கண்ணோட்டத்தில் நீ ஒரு எதிரியாகவே கருதப்படுவாய்.”எதிரி வாழ்க்கை
“வாழ்க்கை சிலரை போதிக்கிறது, சிலரை சோதிக்கிறது; போதிக்கப்படுபவர்கள் எல்லோரும் புத்திசாலிகளாவதும் அல்ல, சோதிக்கப்படுபவர்கள் எல்லோரும் முட்டாள்களாவதும் அல்ல.”சோதனை வாழ்க்கை
“வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் சூரிய உதயமும் உண்டு, சூரிய அஸ்தமனமும் உண்டு; எதற்கும் முடிவு என்பது இல்லை.”முடிவு வாழ்க்கை
“எல்லா நாளுமே வாழ்க்கையில் சோகத்துடனும் முடியாது; எல்லா நாளுமே வாழ்க்கையில் இன்பத்துடனும் முடியாது. ஒவ்வொரு நாளின் முடிவும் உன் கையில்.”முடிவு வாழ்க்கை
“மண்ணில் நீ நெல் விதைக்கிறாயோ, முள் விதைக்கிறாயோ என்பதைப் போலவே, நீ செய்யும் செயலைப் பொறுத்தே உன் வாழ்க்கை அமையும்.”வாழ்க்கை விதை
“வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் தடைகளைத் தகர்த்து செல்ல முடியாவிட்டாலும், அதைத் தவிர்த்து செல்ல கற்றுக்கொள்ளுங்கள்.”தடை வாழ்க்கை
“இவ்வுலகில் நீ இழந்த அனைத்தையும் ஒருநாள் திரும்பப் பெறலாம்; நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருந்தால்.”நம்பிக்கை வாழ்க்கை
“வாழ்க்கையில் வெற்றியை நினைத்து பயணிப்பவனை விட, தோல்வியை நினைத்து பயணிப்பவனே வெற்றி பெறுகிறான்.”பயணம் வாழ்க்கை
“வாழ்க்கையில் நீ பெறும் துன்பங்கள் அனைத்தையும் சிறு மடுவாக நினைத்து கடந்து சென்றால், அந்த இமயமும் உன் காலுக்குக் கீழே.”துன்பம் வாழ்க்கை
“வாழ்க்கையில் நீ முதலில் போராட வேண்டியது உன்னோடுதான்; உன்னை வென்று வா, பின்பு இவ்வுலகையே வெல்லலாம்.”போராட்டம் வாழ்க்கை