“துன்பம் இன்று வரும்; நாளையும் வரலாம். ஆனால், துன்பம் மட்டுமே உன்னைத் தொடர்ந்து கொண்டிருக்கப் போவதில்லை!”இன்பம் துன்பம்
“இன்று நீ துன்பத்தில் இருக்கிறாய் என்றால், நாளை இன்பத்தில் மிதக்கப்போகிறாய் என்பதே அதன் பொருள்!”இன்பம் துன்பம்
“வீழ்வதில் கிடைக்கும் அவமானத்தை மட்டும் பார்க்காதே; அதில் கிடைக்கும் அனுபவத்தையும் பார். அப்போதுதான் வெற்றியை எளிதில் அடைய முடியும்!”அனுபவம் தோல்வி
“வெற்றி பெறுவதற்கான மூன்று முக்கியத் தகுதிகள்: தன்னம்பிக்கை, குறிக்கோள், திட்டமிடல். இவை மூன்றும் இருந்தாலே போதும்!”தன்னம்பிக்கை வெற்றி
“நீ எளிதில் வெற்றி பெற வேண்டுமென்றால், முதலில் எந்தத் துறையில் நீ சிறந்தவன் என்பதை அறிந்துகொள். உன் திறமையை அடையாளம் காணாத வரை வெற்றி எளிதில் கிடைக்காது!”திறமை வெற்றி
“தோல்வி முயன்றவனுக்கும் கிடைக்கும்; முயலாதவனுக்கும் கிடைக்கும். நீ முயன்றவன் என்றால், அத்துடன் உனக்கு அனுபவமும் கிடைக்கும்.”அனுபவம் தோல்வி
“கையை ஊன்றி நீ எழும்போது, விழுந்துவிடுவோமோ என்று நினைத்திருந்தால், இன்றும் நீ குழந்தையாகவே இருந்திருப்பாய்”துணிச்சல் வளர்ச்சி
“என் முன்னே எவ்வளவு பெரிய தடை இருந்தாலும் எனக்கென்ன? அதைத் தாண்டிச் செல்ல எனக்குத் தேவையானது ஒரு சிறு வழி மட்டுமே.”தடை வாய்ப்பு
“உன் வாழ்க்கையில் துன்பங்களுக்கு மேல் துன்பம் வந்துகொண்டே இருக்கிறது என்றால், இன்பம் உன்னைத் தேடி வரும் காலம் நெருங்கிவிட்டது என்று அர்த்தம்.”இன்பம் துன்பம்