“உன்னை ஏற்றி விடுவதும் கைதான்; உன்னை இறக்கி விடுவதும் கைதான்-தன்னம்பிக்கையும் அவநம்பிக்கையும் போல.”அவநம்பிக்கை. தன்னம்பிக்கை
“உன் திறமையின் மீது உனக்குச் சிறிது சந்தேகம் இருந்தாலும், முயற்சிக்காதே; முதல் தோல்வி உனக்குத்தான்.”தன்னம்பிக்கை திறமை
“அவநம்பிக்கையைத் தகர்த்து, தன்னம்பிக்கையை நிலைநிறுத்து; நாளை வரலாறு பேசும் உன் கதை.”அவநம்பிக்கை. தன்னம்பிக்கை
“உன் கனவு எட்டாத தூரத்தில் இருந்தாலும், நீ அதை எட்டிப் பிடிக்கலாம்; விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் உன்னிடம் இருந்தால்.”தன்னம்பிக்கை விடாமுயற்சி
“ஒரு கையை இழந்தவர்கள்கூட இவ்வுலகில் வாழ முடியும்; தன்னம்பிக்கையை இழந்தவர்கள் இவ்வுலகில் வாழ்வது கடினம்.”தன்னம்பிக்கை மனவலிமை
“உன்னிடம் மனவலிமையும் தன்னம்பிக்கையும் இருக்கிறது என்றால், உனக்கு ஏற்படும் துன்பங்களையும் உன்னால் சமாளித்துக்கொள்ள முடியும்.”தன்னம்பிக்கை மனவலிமை
“உன் அடையாளத்தை எப்பொழுதும் யாருக்காகவும் மாற்றிக்கொள்ளாதே; அப்படி நீ மாற்றிக்கொண்டால், உனக்குள் இருக்கும் உனக்கே உன்னைப் பிடிக்காமல் போகலாம்.”அடையாளம் தன்னம்பிக்கை
“வெற்றியிடம் இருந்து அடக்கத்தையும், தோல்வியிடம் இருந்து தன்னம்பிக்கையையும் கையாள கற்றுக்கொள்; நிரந்தர வெற்றி என்றும் உனக்கே.”அடக்கம் தன்னம்பிக்கை
“உன்னால் முடியாது என்று நீ யோசித்தால், நீ முயற்சிக்கும் முன் யோசி; நீ முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது யோசிக்காதே.”தன்னம்பிக்கை முயற்சி
“உன்னை எதிர்ப்பவன் பலம் பொருந்தியவனாக இருந்தால், நீ எதிர்த்து நில். நீ எதிர்த்து நின்றாலே, அவனின் தன்னம்பிக்கையும் சிறிது குறையும்.”தன்னம்பிக்கை துணிச்சல்
“உன்னை எதிர்த்து நிற்பவரைப் பார்த்து பயப்படாதே; உன்னை வெல்ல உன்னைத் தவிர வேறு எவரும் இல்லை என்ற எண்ணத்தை உருவாக்கு.”தன்னம்பிக்கை துணிச்சல்
“தன்னம்பிக்கை என்னும் விதையை விதைத்து, தடைகள் என்னும் பாறையை உடைத்துச் செல்பவனுக்கே வெற்றி நிச்சயம்.”தன்னம்பிக்கை வெற்றி
“தன் கையை மட்டும் நம்பி தோற்றவர்கள் இவ்வுலகில் உண்டு; தன்னம்பிக்கையை நம்பி தோற்றவர்கள் இவ்வுலகில் எவருமில்லை.”தன்னம்பிக்கை வெற்றி
“உன் திறமையின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்; அது நீயாக மட்டும் இருந்துவிடாதே.”தன்னம்பிக்கை திறமை
“நீ நீயாக இருக்கும் வரை உன்னை வெல்ல யாராலும் முடியாது; மற்றவர்களைப் போல மாற நினைத்தாலே, முதல் தோல்வி உனக்குத்தான்.”தனித்துவம் தன்னம்பிக்கை
“தன்னம்பிக்கையோ, தலைக்கனமோ எதை உன்னுடன் வைத்துக்கொள்கிறாயோ, அதைப் பொறுத்தே உனக்கான பலன் அமையும்.”தலைக்கனம் தன்னம்பிக்கை
“உன் கஷ்டத்தில் உன்னைக் ‘கை’விட்டவர்களுக்கு நன்றி சொல்; ஏனெனில், அவர்கள் உன் தன்னம்பிக்‘கை’யை உனக்கு உணர்த்தியவர்கள்.”கஷ்டம் தன்னம்பிக்கை
“உனக்குச் சிறகே இல்லையென்றாலும் நீ பறக்கலாம்; தன்னம்பிக்கை என்னும் சிறகு உன்னிடம் இருந்தால்.”சிறகு தன்னம்பிக்கை
“உன் இரண்டு கைகளையும் இழந்தாலும், தன்னம்பிக்கையை இழக்காமல் இருந்தால் உலகையே வெல்லலாம்.”தன்னம்பிக்கை வெற்றி
“என்னை வெல்ல இவ்வுலகத்தில் என்னைத் தவிர வேறு எவரும் இல்லை என்று நினைத்துக் கொண்டாலே, உன்னை வெல்ல இவ்வுலகில் எவரும் இல்லை.”தன்னம்பிக்கை வெற்றி
“உன் இலக்கை அடைவதற்கு, நீ உன்னோடு உன் தன்னம்பிக்கையை மட்டும் கூட்டிச் செல்; உன் இலக்கை எளிதில் அடையலாம்.”இலக்கு தன்னம்பிக்கை
“உன் நம்பிக்கையை கொண்டு நீ போராடினால், உனக்கு உறுதுணையாக நான் இருக்கிறேன் — இப்படிக்கு தன்னம்பிக்கை.”அவநம்பிக்கை. தன்னம்பிக்கை
“இன்று நீ முயற்சி செய்து விழுந்திருக்கலாம்; விழுவது எழுவதற்காகத்தானே தவிர அழுவதற்காக அல்ல.”தன்னம்பிக்கை முயற்சி
“உன் திறமை ஒருபோதும் மற்றவரின் கையால் வெளிப்படுவதில்லை; உன் தன்னம்பிக்கையால் மட்டுமே வெளிப்படும்.”தன்னம்பிக்கை திறமை