“துன்பம் என்னை விட்டு விலகுவதில்லை என்று நினைக்காதே; நீ அதைவிட்டு விலகி நிற்கவில்லை என்பதே உண்மை!”துன்பம் மனவலிமை
“துன்பமில்லாத வாழ்க்கை என்று எதுவும் இல்லை; அதைத் தாண்டிச் செல்லப் பழகிக்கொள். இன்பமான வாழ்க்கை உனக்காகக் காத்திருக்கிறது!”துன்பம் நம்பிக்கை
“நாம் என்னவோ முதல் முறையாகத் தடைகளைச் சந்திக்கிறோம் என்று எண்ணாதே; பிறந்தது முதல் இன்று வரை ஒவ்வொரு கட்டத்திலும் ஆயிரக்கணக்கான தடைகளைக் கடந்துதான் வந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்!”தடைகள் தன்னம்பிக்கை
“நாம் பிறந்தது முதல் இன்று வரை பல தடைகளைக் கடந்து வந்திருக்கிறோம்; தடைகள் நமக்குப் புதியவை அல்ல!”தடைகள் தன்னம்பிக்கை
“கடந்த காலத்தில் நீ செய்த தவறை நிகழ்காலத்தில் மாற்ற முடியாது; ஆனால் நிகழ்காலத்தில் செய்யவிருக்கும் தவறைத் திருத்திக்கொண்டால், உன் எதிர்காலத்தை மாற்றலாம்.”எதிர்காலம் கடந்தகாலம்
“உன் எதிர்காலத்தை உனக்கு ஏற்றபடி மாற்றி அமைக்க வேண்டும் என்றால், அதை இப்போதே இந்த நிகழ்காலத்திலேயே செய்து முடி!”எதிர்காலம் நிகழ்காலம்
“நிகழ்காலத்தில் நீ கஷ்டப்படுகிறாய் என்றால், அந்தக் கஷ்டத்திற்கான காரணத்தை கடந்த காலத்தில் உருவாக்கியதே நீதான்.”கடந்தகாலம் நிகழ்காலம்
“உன் நிகழ்காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், கடந்த காலத்தை எண்ணிக் கலங்கவும் தேவையில்லை; எதிர்காலத்தை எண்ணிக் கவலைப்படவும் தேவையில்லை.”முயற்சி வெற்றி
“நீ இழந்த கடந்த காலத்தையும், வரவிருக்கும் எதிர்காலத்தையும் உன் நிகழ்காலத்தால் மாற்றியமைக்க முடியும்.”எதிர்காலம் நிகழ்காலம்
“நீ இழந்த கடந்த காலத்தை எண்ணி வருந்துவதும், வரவிருக்கும் எதிர்காலத்தை எண்ணி எதிர்பார்ப்பதும் பயனில்லை; இருக்கும் நிகழ்காலத்தில் என்ன செய்கிறாய் என்பதை நினைவில் கொள்.”நிகழ்காலம் வாழ்க்கை
“உன்னுடைய வாய்ப்பை எவராலும் தட்டிப்பறிக்க முடியாது; நீ அந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டாய் என்பதே அதன் பொருள்.”முயற்சி வாய்ப்பு
“வீழ்வது ஒன்றும் வீழ்ச்சி அல்ல; விழுந்து கிடப்பதே உண்மையான வீழ்ச்சி. இதை உணர்ந்தவன் வாழ்க்கையில் ஒருபோதும் தோற்பதில்லை.”எழுச்சி வீழ்ச்சி
“நம் வாழ்க்கையில் நாம் ஒருபோதும் மறக்கக்கூடாதவர்கள், அன்பைத் தந்தவர்களைவிட, அவமானத்தைத் தந்தவர்களே.”அவமானம் பாடம்
“இவ்வுலகிலேயே நிம்மதியாக வாழ்பவர்கள் ஞாபக மறதி உள்ளவர்கள் அல்ல; தேவையில்லாத நினைவுகளை மறக்கக் கற்றுக்கொண்டவர்களே.”நிம்மதி நினைவுகள்
“வாழ்க்கையில் விட்டுக்கொடுப்பது தவறல்ல; ஆனால், யாருக்காக விட்டுக்கொடுக்கிறாய் என்பதுதான் முக்கியம்.”உறவு விட்டுக்கொடுத்தல்
“இவ்வுலகில் உள்ளவர்கள் எல்லோரும் நல்லவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், நாம் நல்லவர்களா என்று யோசிப்பதில்லை; மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்.”நல்லொழுக்கம் மாற்றம்
“இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் எதிரிகள் உண்டு; எதிரிகள் இல்லை என்றால், உன் இலக்கை நோக்கி நீ எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்றே அர்த்தம்.”இலக்கு எதிரி
“வாழ்க்கை சிலரை போதிக்கிறது, சிலரை சோதிக்கிறது; போதிக்கப்படுபவர்கள் எல்லோரும் புத்திசாலிகளாவதும் அல்ல, சோதிக்கப்படுபவர்கள் எல்லோரும் முட்டாள்களாவதும் அல்ல.”சோதனை வாழ்க்கை