“நிகழ்காலத்தில் நீ செதுக்கிய கல் தான் எதிர்காலத்தில் சிற்பமாக மிளிரும்; அதுபோல இன்று உனக்கு ஏற்படும் வலிகள் எதிர்காலத்தில் வலிமையாக மாறும்”வலிகள் வலிமை
“வாய்ப்பு என்பது ஒவ்வொரு முறையும் கிடைப்பதில்லை; ஏதோ ஒரு முறை கிடைப்பது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதே சாலச் சிறந்தது.”முயற்சி வாய்ப்பு
“உனக்கான வாய்ப்பு உன்னைத் தேடி வரும்போது அதை ஏற்றுக்கொள்; நீ எதிர்பார்க்கும் தருணத்தில் அந்த வாய்ப்பு உனக்குக் கிடைக்காது.”தருணம் வாய்ப்பு
“உனக்கு ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்; ஏனென்றால் அந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் என்பது சந்தேகம்தான்.”முயற்சி வாய்ப்பு
“உன் லட்சியத்தை அடைய கனவு காண உன்னால் முடிகிறது என்றால், பிறகு ஏன் உன் லட்சியத்தை உன்னால் அடைய முடியாமல் போகிறது?”கனவு லட்சியம்
“உன்னை ஏற்றி விடுவதும் கைதான்; உன்னை இறக்கி விடுவதும் கைதான்-தன்னம்பிக்கையும் அவநம்பிக்கையும் போல.”அவநம்பிக்கை. தன்னம்பிக்கை
“வெற்றியை பட்டமாக மாற்றி, அதை காற்றில் பறக்க விடு; தோல்வியை விதையாக மாற்றி, உன் நெஞ்சில் புதைத்து விடு.”தோல்வி வெற்றி
“எப்போதும் உன் முன்னேற்றத்தைப் பற்றி மட்டும் யோசி; அதற்காக முயற்சி செய்து கொண்டே யோசி.”முயற்சி முன்னேற்றம்
“உன்னுடைய தகுதியை நீயே தெரிந்துகொள்ள, உனக்கு ஒரு தோல்வியும் ஒரு வெற்றியும் தேவைப்படுகிறது.”அனுபவம் தகுதி
“உனக்கு ஏற்பட்ட துன்பங்களைக் கடந்து செல்வதற்கு, உன்னிடம் மனதைரியம் மட்டும் இருந்தால் போதும்.”துன்பம் மனதைரியம்
“உன்னிடம் மனவலிமையும் தன்னம்பிக்கையும் இருக்கிறது என்றால், உனக்கு ஏற்படும் துன்பங்களையும் உன்னால் சமாளித்துக்கொள்ள முடியும்.”தன்னம்பிக்கை மனவலிமை
“ஒவ்வொரு இரவிற்கும் விடியல் என்பது நிச்சயம் உண்டு; அதுபோல, ஒவ்வொரு விடாமுயற்சிக்கும் வெற்றி என்பதும் நிச்சயம் உண்டு.”விடாமுயற்சி வெற்றி
“உனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்க, என்றும் உன் விடாமுயற்சியை உன்னுடனே வைத்துக்கொள்.”அடையாளம் விடாமுயற்சி
“நீ ஆபத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறாய் எனில், அதை ஆபத்து என்று உணராத வரை உனக்கு ஆபத்து இல்லை. தைரியத்துடன் போராடு!”துணிச்சல் போராட்டம்
“உன்னை எதிர்ப்பவன் பலம் பொருந்தியவனாக இருந்தால், நீ எதிர்த்து நில். நீ எதிர்த்து நின்றாலே, அவனின் தன்னம்பிக்கையும் சிறிது குறையும்.”தன்னம்பிக்கை துணிச்சல்
“தன்னம்பிக்கை என்னும் விதையை விதைத்து, தடைகள் என்னும் பாறையை உடைத்துச் செல்பவனுக்கே வெற்றி நிச்சயம்.”தன்னம்பிக்கை வெற்றி
“உன்னை எதிர்ப்பவன் பலம் பொருந்தியவனாக இருந்தால், அவனை உன் பலத்தால் அல்ல; அவன் பலவீனத்தால் வீழ்த்து.”பலம் பலவீனம்
“தன் கையை மட்டும் நம்பி தோற்றவர்கள் இவ்வுலகில் உண்டு; தன்னம்பிக்கையை நம்பி தோற்றவர்கள் இவ்வுலகில் எவருமில்லை.”தன்னம்பிக்கை வெற்றி
“தன்னம்பிக்கையோ, தலைக்கனமோ எதை உன்னுடன் வைத்துக்கொள்கிறாயோ, அதைப் பொறுத்தே உனக்கான பலன் அமையும்.”தலைக்கனம் தன்னம்பிக்கை
“உன் கஷ்டத்தில் உன்னைக் ‘கை’விட்டவர்களுக்கு நன்றி சொல்; ஏனெனில், அவர்கள் உன் தன்னம்பிக்‘கை’யை உனக்கு உணர்த்தியவர்கள்.”கஷ்டம் தன்னம்பிக்கை
“உனக்கான ஒன்றை ஒருவன் தட்டிப் பறிப்பதால் அவன் உயரப் போவதுமில்லை; உனக்கான ஒன்றை நீ விட்டுக்கொடுப்பதால் நீ வீழப் போவதுமில்லை.”உரிமை நம்பிக்கை
“தோல்வி என்பது இருள் வெற்றி என்பது வெளிச்சம் தோல்வியின் இருளிலிருந்து வெற்றி எனும் வெளிச்சத்திற்கு நீ வரும்வரை போராடு.”தோல்வி வெற்றி
“தோல்வியை நினைத்து எனக்கு கவலை இல்லை; வெற்றி தராத ஒன்றை தோல்வி எனக்குத் தந்துள்ளது. அதுவே அனுபவம்.”அனுபவம் தோல்வி
“வெற்றியும் நிரந்தரமல்ல; தோல்வியும் நிரந்தரமல்ல. ஆனால், முயற்சி உன்னிடம் இருந்தால் வெற்றி மீண்டும் மீண்டும் உன்னைத் தேடி வரும்.”முயற்சி வெற்றி
“ஒருமுறை வெற்றி பெற்றவர்களைவிட, ஆயிரம் முறை தோல்வியைச் சந்தித்தவர்களே இறுதியில் சாதனையாளர்களாக உருவாகின்றனர்”சாதனை தோல்வி
“இவ்வுலகத்தை மாற்ற வேண்டும் என்று நீ விரும்பினால், அந்த மாற்றத்தை உன்னிடமிருந்தே தொடங்கு.”மாற்றம் முன்னேற்றம்
“மண்ணில் உன்னைத் தூக்கி எறிவது புதைப்பதற்காக அல்ல; விதைப்பதற்காக. நீ முளைத்தால் மரம், புதைந்தால் உரம்.”வளர்ச்சி விதை
“உன் வலியும் வேதனையும் உன்னைச் செதுக்கும் உளி. உளியின் வலியைத் தாங்காத கற்கள் என்றும் சிலைகளாவதில்லை.”சிலை வலி
“உனக்குச் சிறகே இல்லையென்றாலும் நீ பறக்கலாம்; தன்னம்பிக்கை என்னும் சிறகு உன்னிடம் இருந்தால்.”சிறகு தன்னம்பிக்கை
“உன்னைக் கீழே தள்ளிப் புதைத்தவர்களுக்கு தெரியாது; நீ யாரென்று. ஒரு நாள் மண்ணைப் பிளந்து வெளியே வரும்போதுதான் தெரியும், நீ விதை என்று.”எழுச்சி விதை
“உன்னைத் தனித்து விடுவது, நீ சிறகை விரிப்பதற்காகத்தானே தவிர, உன் சிறகை உடைப்பதற்காக அல்ல.”சிறகு தனிமை
“உன்னை அவமானப்படுத்தியவர்களை அவமானப்படுத்துவது பதிலடி அல்ல; அவர்கள் முன்னே வாழ்ந்து காட்டுவதே உண்மையான பதிலடி.”அவமானம் வெற்றி
“‘பறக்க ஆசைப்பட்டு இருப்பதையும் இழந்துவிடாதே’ என்பார்கள்; ஆனால் பறக்க ஆசைப்படு… அப்போதுதான் குறைந்தபட்சம் நடக்கவாவது தொடங்குவாய்.”ஆசை முன்னேற்றம்