“இன்று நீ தோல்வி அடைந்தாய் எனில், நாளை நீ வெற்றி பெறுவதற்கான முதல் படியை கடந்து விட்டாய் என்று அர்த்தம்.”தோல்வி வெற்றி
“நீ எதை மறந்தாலும், உன் அவமானங்களை மட்டும் மறந்து விடாதே; உன் அவமானமே அடுத்த உன் வெற்றிக்கு வழிவகுக்கும்.”அவமானம் வெற்றி
“நீ மற்றவர்களைப் போல ஆக வேண்டும் என்று எண்ணாதே; உன்னைப் போல ஆக வேண்டும் என்ற எண்ணத்தை மற்றவர்களுக்கு உருவாக்கு.”தனித்துவம் முன்மாதிரி
“மற்றவர்கள் உன்னை உதைத்து எறிந்தால், நீ பந்து அல்ல பாறை என்று அவர்களுக்கு நிரூபித்துக் காட்டு.”பந்து பாறை
““காயங்கள் இல்லாமல் போர்க்களத்தில் வெற்றி என்பது எவருக்கும் இல்லை; வலிகளை தாங்கி நிற்பவனுக்கே வெற்றி சொந்தமாகிறது.””வலி வெற்றி
““எல்லோருக்கும் தோல்வி என்பது நிச்சயம் உண்டு; அந்தத் தோல்வியை சமாளிக்கும் திறமை உள்ளவனே, அடுத்த வெற்றியை அடைகிறான்.””தோல்வி வெற்றி
“உன் அச்சத்தை உச்சத்தில் கொண்டு வைக்காதே; அதை துச்சமாக தூக்கி எறிந்தால், வெற்றி நிச்சயம்.”அச்சம் வெற்றி
“இன்று உனக்கு ஏற்படும் எதிர்ப்புகளை நினைத்து பயம் கொள்ளாதே; அதில் கிடைக்கும் அனுபவங்களை நினைத்து பெருமிதம் கொள்.”அனுபவம் எதிர்ப்பு
“உனக்குத் தகுதி இல்லை என்று நிராகரித்தால், கவலைப்படாதே; உன்னுடைய தகுதியை புரிந்து கொள்ளும் தகுதி அவர்களுக்கு இல்லை என்று நினைத்துக்கொள்.”தகுதி நிராகரிப்பு
“உன்னுடைய வெற்றியில் உன்னோடு ஆயிரம் பேர் இருக்கலாம்; உன்னுடைய தோல்வியில் உன்னோடு நீ மட்டுமே இருப்பாய்.”தோல்வி வெற்றி
“உன்னுடைய எதிரி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்; அது உன்னுடைய பயமாக மட்டும் இருக்கக்கூடாது.”எதிரி பயம்
“எவரும் தன் இலக்கை உடனடியாக அடைவதில்லை; பல தடைகளையும் சோதனைகளையும் கடந்த பின்னரே தன் இலக்கை அடைய முடியும்.”இலக்கு சோதனை
“நீ அடைந்தது தோல்வி அல்ல, பாடம்; வாழ்க்கையில் ஒவ்வொருவரும் முதலில் கற்றுக்கொள்ளும் பாடம் தோல்விதான்.”தோல்வி பாடம்
“உயர் நிலை அடைய வேண்டுமானால் உன் மனதை ஒருநிலைப்படுத்து; பின்பு ஒரு நிலையை உன்னால் அடைய முடியும்.”உயர்நிலை மனம்
“போராடி வெற்றியைப் பெற்றவரிடம் கேட்டுப் பார்; தோல்விக்குப் பின் தான் வெற்றி, வெற்றிக்குப் பின் தோல்வி என்பதே இல்லை.”தோல்வி வெற்றி
“காலம் ஒருபோதும் பின்நோக்கி நகர்வதும் இல்லை; காலம் யாருக்காகவும் காத்திருப்பதும் இல்லை.”காத்திருப்பு காலம்
“மலையைப் பார்த்து மலைத்து விடாதே; மலையை கூட மடுவாக நினைத்தால் அந்த மலையும் உன் காலுக்குக் கீழே.”மடுவு மலை
“மண்ணில் நீ நெல் விதைக்கிறாயோ, முள் விதைக்கிறாயோ என்பதைப் போலவே, நீ செய்யும் செயலைப் பொறுத்தே உன் வாழ்க்கை அமையும்.”வாழ்க்கை விதை
“வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் தடைகளைத் தகர்த்து செல்ல முடியாவிட்டாலும், அதைத் தவிர்த்து செல்ல கற்றுக்கொள்ளுங்கள்.”தடை வாழ்க்கை
“மண்ணில் வீழ்வது விதையாக இருக்கலாம் அல்லது கல்லாக இருக்கலாம்; நீ விதை என்றால் அந்த மண்ணில் விருட்சமாய் உயர்வாய், நீ கல் என்றால் அந்த மண்ணுக்குள்ளே புதைந்து போவாய்.”உயர்வு வீழ்ச்சி
“இவ்வுலகில் நீ இழந்த அனைத்தையும் ஒருநாள் திரும்பப் பெறலாம்; நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருந்தால்.”நம்பிக்கை வாழ்க்கை
“வாழ்க்கை மாற்றங்களைத் தவிர்க்காது; அதை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்பவனே உண்மையான வளர்ச்சியை அடைகிறான்.”ஏமாற்றம் தேடல்
“உன்னுடைய தேடலில் நீ இழந்தது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; நம்பிக்கையை மட்டும் இழந்து விடாதே.”தேடல் நம்பிக்கை
“இன்று நீ முயற்சி செய்து விழுந்திருக்கலாம்; விழுவது எழுவதற்காகத்தானே தவிர அழுவதற்காக அல்ல.”தன்னம்பிக்கை முயற்சி