“நீ எடுக்கும் முடிவு சரியானதா என்று முடிவு எடுப்பதற்கு முன் யோசி; முடிவு எடுத்த பிறகு யோசிக்காதே.”முடிவு வாழ்க்கைப்பாடம்
“தன் வாழ்க்கையில் மாற்றத்தை எதிர்பார்க்கும் ஒருவன், ஏமாற்றத்தையும் எதிர்கொள்ள நேரிடும்.”ஏமாற்றம் மாற்றம்
“உன்னுடைய தேடலில் நீ ஏமாந்திருக்கிறாய் எனில், அது ஏமாற்றம் அல்ல; அந்தத் தேடலில் நீ முழுமையாக ஈடுபடவில்லை என்பதன் பொருள்.”எதிர்பார்ப்பு ஏமாற்றம்
“நீ ஏமாந்தது கைப்பிடி அளவுதான்; ஆனால் நீ அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது எண்ணில் அடங்காதவை.”ஏமாற்றம் மாற்றம்
“உன் ஏமாற்றத்தை நினைத்து வருந்தாதே; உனக்கான மாற்றமே உன் ஏமாற்றத்திலிருந்துதான் பிறக்கும்.”ஏமாற்றம் மாற்றம்
“உனக்கு எட்டாத கனியாக வெற்றி இருந்தாலும், அதை எட்டிப் பறிக்கும் திறமை உன்னிடம் இருந்தால், அந்த வெற்றிக் கனி என்றும் உன் வசமே.”உறுதி பெண்கள்
“உன் திறமை ஒருபோதும் மற்றவரின் கையால் வெளிப்படுவதில்லை; உன் தன்னம்பிக்கையால் மட்டுமே வெளிப்படும்.”தன்னம்பிக்கை திறமை
“உனக்கு கிடைத்த தோல்விகளிலிருந்து நீ கற்றுக்கொள்ள வேண்டியது அவமானங்களை அல்ல, அனுபவங்களை.”அவமானம் அனுபவம்
“போராட்டத்திற்கு முன்பே தோற்றுவிடுவோமோ என்று நினைக்காதே; போராடி தோற்றாலும், வெற்றி பெற்றவனும் உன்னை எளிதில் மறக்க மாட்டான்.”போராட்டம் வெற்றி
“உன் லட்சியம் வெறும் கனவாக மட்டுமே இருந்தால், அது விடியும் வரை மட்டுமே உன்னிடம் இருக்கும்.”கனவு லட்சியம்
“வாழ்க்கையில் வெற்றியை நினைத்து பயணிப்பவனை விட, தோல்வியை நினைத்து பயணிப்பவனே வெற்றி பெறுகிறான்.”பயணம் வாழ்க்கை
“வெற்றி தரும் தலைக்கனத்தை விட, தோல்வி தரும் தலைகுனிவே உன்னை தலைசிறந்தவனாக உருவாக்கும்.”தலைகனம் வெற்றி
“வேறு ஒருவருடைய திறமைக்கான பரிசை பெற்றுக் கொள்பவன், ஒருபோதும் தன்னுடைய திறமையை அறிந்து கொள்ளப் போவதில்லை.”திறமை பரிசு
“நீ எப்போது ‘இது என்னால் முடியாது’ என்று நினைக்கிறாயோ, அப்பொழுதே அது உன்னால் முடியாமல் போகிறது.”முடியாது முடியும்
“உன் லட்சியத்தை அடைய காலம் காலமாகக் காத்திருக்காதே; காலம் உனக்காக ஒருபோதும் காத்திருக்காது.”காலம் லட்சியம்
“வாழ்க்கையில் நீ பெறும் துன்பங்கள் அனைத்தையும் சிறு மடுவாக நினைத்து கடந்து சென்றால், அந்த இமயமும் உன் காலுக்குக் கீழே.”துன்பம் வாழ்க்கை
“வாழ்க்கையில் நீ முதலில் போராட வேண்டியது உன்னோடுதான்; உன்னை வென்று வா, பின்பு இவ்வுலகையே வெல்லலாம்.”போராட்டம் வாழ்க்கை
“படிகளை தடைகளாகப் பார்த்தால் தோல்வி நிச்சயம்; அதுவே தடைகளைப் படிகளாக மாற்றி முன்னேறினால் வெற்றி நிச்சயம்.”தடை வெற்றி
“வாய்ப்பு என்பது நாம் தேடி செல்வதல்ல; நம் திறமையால் நம்மைத் தேடி வருவது. திறமையை வளர்த்துக் கொள்; நாளை வாய்ப்பு நம்மைத் தேடி வரும்.”திறமை வாய்ப்பு